இந்நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப்பேச்சாளர் அஜித் வீரசுந்தர குறிப்பிட்டுள்ளார். கொழும்பு மாவட்டத்தில் பத்தரமுல்லை மற்றும் கொழும்பு கோட்டையை அண்மித்த பகுதிகளில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு 105 புள்ளிகளாகவும், யாழ்ப்பணத்தில் 100 புள்ளிகளாகவும் அதிகரித்துள்ளது.
நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், விமான நிலையத்தினூடாக முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் விமான நிலையப் பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை 1,325 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
14.01.2000இல் மரணித்த தோழர் செல்லக்கிளி மாஸ்டர் (வடிவேல் விஐயரட்ணம் – பருத்தித்துறை) அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
14.01.1988இல் மரணித்த தோழர்கள் ரங்கன் (பெரியகல்லாறு), ஜோன்சன் (யாழ்ப்பாணம்), சேரலாதன் (குஞ்சுக்குளம்), வேலு (வில்வராஜா – குழவிசுட்டான்), சேகர் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இலவசமாக வழங்கப்படும் 20 ரயில் எஞ்சின்களில் 02 எஞ்சின்கள் எதிர்வரும் 04 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த எஞ்சின்கள் இந்நாட்டில் இயங்குவதற்கு ஏற்றவையா என ஆராயவே இவ்வாறு கொண்டுவரப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, ரயில் எஞ்சின்களை ஆய்வு செய்வதற்காக இலங்கை ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த 05 பரிசோதகர்கள் இந்தியாவிற்கு சென்றிருந்தனர். நாட்டின் வடக்கு ரயில்வே மார்க்கத்தில் சரக்கு போக்குவரத்திற்கு இந்த எஞ்சின்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் கந்தகாடு புனர்வாழ்வு நிலைய நிர்வாகத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த மாற்றத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்பிரகாரம், கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்த விரிவான அறிக்கை கிடைத்ததும் அது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் 24 கைதிகள் காயமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக, அசாதாரண காலநிலை காரணமாக, வடக்கு கிழக்கில் வெள்ள நிலைமை ஏற்பட்டு அதன் காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது நீங்கள் யாவரும் அறிந்ததே.
பிரித்தானிய இளவரசி ஆன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-505 விமானத்தினூடாக அவர் பிரித்தானியா நோக்கி பயணமாகியுள்ளார். கடந்த 10 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த இளவரசி ஆன், தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்தார். இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இளவரசி நாட்டிற்கு விஜயம் செய்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு இன்று காலை பயணித்தார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளார். அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் நிகழ்ச்சி நிரல்களை வடிவமைப்பதற்காக ஆண்டின் தொடக்கத்தில், உலகின் முக்கிய நாடுகள் பங்கேற்கும் கூட்டமே உலக பொருளாதார மன்றமாகும். சர்வதேச நிறுவனங்கள், அமைப்புகள், சிவில் சமூகம் மற்றும் கல்வி நிறுவனங்களும் இதில் பங்கேற்று வருகின்றன.