சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளது. கடன் சலுகை வழங்கப்பட்டதையடுத்து, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக இந்த குழு நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.