தாய்லாந்து எல்லைப் பகுதியை அண்மித்து, மியன்மாரின் கெரன் மாகாணத்தின் மியாவெட்டி பகுதியில் பயங்கரவாத குழுவொன்றினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்களையும் சிறப்பு நடவடிக்கையின் மூலம் மீட்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை – மியன்மார் வௌிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலும் BIMSTEC தூதுவர்கள் மற்றும் மியன்மாரின் பிரதி வௌிவிவகார அமைச்சர் இடையிலும் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலில் இது தொடர்பில் சாதகமான பதில் கிடைத்ததாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக்க பண்டார தெரிவித்தார்.
BIMSTEC-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியா நேபாளம் பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து தூதுவர்களுடன் இணைந்து மியன்மாரின் பிரதி வௌிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.
இந்த இரு கலந்துரையாடல்களும் மிகவும் வெற்றியளித்துள்ளதாகவும் இந்த பிரச்சினை தொடர்பில் சாதகமான பதில் கிடைத்ததாகவும் மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக்க பண்டார தெரிவித்தார்.