வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புனித இராஜப்பர் தேவாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணியானது, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டு அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. காவல்துறையின் கைது நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், பதாகைகளை ஏந்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.