கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் காணப்பட்ட சீரற்ற காலநிலையால், ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்ட்டிருந்தவர்களுக்கு நிவாரண உதவி கோரி ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) விடுத்திருந்த வேண்டுகோளுக்கமைய, புளொட் அமைப்பின் கனடா கிளையினரும்,பிரித்தானிய கிளை உறுப்பினர் முகுந்தன் அவர்களும் அனுப்பி வைத்திருந்த 250000/ நிதியுதவியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இன்று(25- 01-2024) மாவடிவேம்பில்நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தோழர் ம.நிஸ்கானந்தராஜா அவர்களின் தலைமையில், கடசியின் சமுகமேம்பாட்டுப்பிரிவின் பொறுப்பாளர் ந.ராகவன் அவர்களினால் 237 குடும்பங்களுக்கு தலா ஐந்து கிலோ அரிசி வீதம் நிவாரணம் வழங்கப்பட்டது.
இன்றைய நிகழ்வில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் சீ.சங்கரப்பிள்ளை,மாவடிவேம்பு கிராம சேவை உத்தியோகஸ்தர் இர்பான் கிராம அவிபிரித்தி சங்க தலைவர் க.விஜயராஜா,ஆகியோர் கலந்து கொண்டனர்.