வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து இன்று (03) குடும்ப பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.வவுனியா மகாறம்பைக்குளம் மதீனாநகர் பகுதியில் வீட்டு கிணறு ஒன்றிலிருந்து குடும்ப பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்ட்டுள்ளது.

சடலமாக காணப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயாரான காண்டீபன் கோமதி (வயது 59) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த உறவினர்கள், வழமைபோன்று நித்திரைக்கு சென்றவரை காலையில் காணவில்லை என தேடிய போது கிணற்றினுள் சடலமாக காணப்பட்டதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.