முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு பிணை வழங்கி கொழும்பு பிரதம நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மீள் பரிசீலனை மனு தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய குறித்த மனு எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை இன்று (05) பிறப்பித்துள்ளார்.

விண்ணப்பம் மீதான விசாரணை இன்று (05) நடைபெறவிருந்த போதிலும், சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுகயீனமுற்றிருப்பதால், இந்த விசாரணையை ஒத்திவைப்பதற்கு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.