புதிய கொரோனா வைரஸ் (கொவிட் – 19) சர்வதேச ரீதியில் பரவுவதன் காரணமாக நாட்டுக்கு வருவோரைதனிமைப்படுத்தும் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தேசிய பொறுப்பை ஊக்குவிக்க கடற்படை கடந்த 16 ஆம் திகதி பூசா கடற்படை முகாமில் தனிமைப்படுத்தும் மத்திய நிலையம் ஒன்றை அமைத்துள்ளது.

4 மாடிகளை கொண்ட குறித்த கட்டடத்தில் 136 பேர் தங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்தை நோக்கி வரும் நபர்களுக்கு தேவையான பாதுகாப்பு பொருட்கள், வைஃபை, தொலைக்காட்சி, மின்சார உபகரணங்கள் ஆகிய வசதிகளை பெற்றுக் கொடுக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.