வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்தத் திருவிழா, நாளை சனிக்கிழமை (7) காலை இடம்பெறவுள்ளது.இன்று வெள்ளிக்கிழமை (06) மாலை 4 மணிக்கு,  கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாவதுடன் திருச்சொரூப செபமாலையும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.

நாளை சனிக்கிழமை காலை, திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், தலைமன்னார் கடற்கரையில் இருந்தும் வடக்கே யாழ்ப்பாணம் – குறிகட்டுவான் இரங்கல் துறையிலிருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், படகுகள் மூலம் கச்சதீவை நோக்கிப் பயணமாகியுள்ளனர்.