 மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று மாலை ஏற்பட்ட தீ காரணமாக மூன்று வர்த்தக நிலையங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.கல்லடி மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக மூன்று வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்துள்ளன.

ஹாட்வெயார் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அருகில் இருந்த இரண்டு வர்த்த நிலையங்கள் எரிந்துள்ளன.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்று தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் கலகமடக்கு பகுதியில் சேவையில் ஈடுபடுத்தும் நீர் அடிக்கும் வாகனமும் தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்தது.
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வ தி.சரவணபவன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களும் நேரடியாக சென்று தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
குறித்த தீ பரவல் தொடர்பில் எதுவித காரணமும் தெரியாத நிலையில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த தீயினால் மூன்று வர்த்தக நிலையங்களும் முற்றாக எரிந்துள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.