கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்த நான்காவது நபர், இந்தியா சென்று நாடு திரும்பியவர் என்பதுடன், இவர் இரத்மலானை-வெடிகந்தை பகுதியைச் சேர்ந்தவரெனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் ஐ.டீ.எச் வைத்தியசாலையில் வைத்து நேற்று 02) உயிரிழந்தார். இவரும் இவரது மனைவியும் இத்தாலி நபர்களுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளதுடன், அண்மையில் இருவரும் இந்தியா சென்று நாடு திரும்பியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.