விழிநீர் அஞ்சலி

அமரர் கணபதிப்பிள்ளை நாகலிங்கம் அவர்கள்

யாழ். கரணவாயை பிறப்பிடமாகவும் திருகோணமலை உவர்மலையை வாழ்விடமாகவும் கொண்டவரும், தோழர் குருபரன் அவர்களின் தந்தையாருமான கணபதிப்பிள்ளை நாகலிங்கம் (ஓய்வுபெற்ற – இலங்கை துறைமுக அதிகாரசபையின் பிரதம லிகிதர்) அவர்கள் இன்று (04.04.2020) சனிக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அமரர் கணபதிப்பிள்ளை நாகலிங்கம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், நட்புக்கள், உறவுகளோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு, துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)குறிப்பு:
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (05.04.2020) ஞாயிற்றுக்கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெற்று காலை 10.00 மணிக்கு தகனக் கிரியைகளுக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.