இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் Eric Walsh) இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பெற்ற வெற்றிக்கு தனதும் கனேடிய அரசாங்கத்தினதும் மக்களினதும் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்த கனேடியத் தூதுவர் ஊழலை ஒழித்து நாட்டில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அர்ப்பணிப்பையும் பாராட்டினார். Read more
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று 7 நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்துள்ளார். அனைத்து நாடுகளுடனும் உறவுகளை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கை பிரகாரம் சந்திப்புகள் அமைந்துள்ளன. இலங்கைக்கான கியூப தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) இன்று காலை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். டெங்கு ஒழிப்புக்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக கியூப தூதுவர் உறுதி அளித்தார்.
சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ.ஷென்ஹொங் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் வெற்றிக்கு மனப்பூர்வமான வாழ்த்து தெரிவித்த தூதுவர் இலங்கையின் எதிர்காலச் செயற்பாடுகளுக்குச் சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும் சீனா அரசாங்கத்துடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் (02) கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இலங்கையுடனான தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தார். சமுத்திர பாதுகாப்பு எல்லை நிர்ணயம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இலங்கைக்கு அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இதன்போது உறுதியளிக்கப்பட்டது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்கத் தூதுவர் தமது எக்ஸ் தளத்தில் இந்த சந்திப்பு குறித்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற விடயங்களில் இணைந்து பணியாற்றுவதற்கும் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.