
Posted by plotenewseditor on 27 October 2024
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 27 October 2024
Posted in செய்திகள்
எல்பிட்டிய பிரதேச சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று(26) 17 வட்டாரங்களில் நடைபெற்ற தேர்தலில் 15 வட்டாரங்களின் வெற்றி தேசிய மக்கள் சக்தி வசமானது. 55,643 வாக்காளர்கள் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 36,825 பேர் வாக்களித்திருந்தனர். Read more
Posted by plotenewseditor on 27 October 2024
Posted in செய்திகள்
நாட்டிற்கு திரும்பிச்செல்லும் எதிர்பார்ப்பிலுள்ள இலங்கையர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகுவதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. தற்போதைய மோதல் நிலைமைக்கு மத்தியில் பாதுகாப்பின்மையை உணரும் பட்சத்தில் மீண்டும் நாட்டிற்கு திரும்பிச்செல்வதற்காக பதிவு செய்ய முடியுமென தூதரகம் அறிவித்துள்ளது. இதற்காக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் இன்றும் திறக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 27 October 2024
Posted in செய்திகள்
விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 2 ரஷ்யப் பிரஜைகள் கண்டி – ஹந்தானையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கண்டி சுற்றுலா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 39 மற்றும் 32 வயதான தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.