இலங்கைக்கு நாளை விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். ஒருநாள் விஜயமாக இலங்கை வருகின்ற அவருடன் இந்தியாவின் முக்கிய உயர்மட்டத் தூதுக்குழு ஒன்றும் வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.