Header image alt text

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு இன்று முற்பகல் வருகை தந்திருந்தார். இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் வௌிவிவகார அமைச்சின் அதிகாரிகள்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். இந்திய வௌிவிவகார அமைச்சருடன் 08 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர். இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். Read more

இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று முற்பகல் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அவர் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இதன்போது வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்திப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய வௌிவிவகார அமைச்சருடன் 8 பேர் அடங்கிய தூதுக்குழுவும் நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

உயிர் பாதுகாப்பிற்காக சிவில் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை தற்காலிகமாக மீளப் பொறுப்பேற்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மீளாய்வின் பின்னர் மீளவும் வழங்குவது தொடர்பிலான பரிசீலனைக்குட்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது. துப்பாக்கிகள், அவற்றுக்காக வழங்கப்பட்டுள்ள தோட்டாக்களை எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசறை வணிக வெடிபொருட்கள் களஞ்சியசாலையில் ஒப்படைக்குமாறு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

இலங்கைக்கும், இஸ்ரேலுக்குமான விமானச் சேவைகள் இன்று மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன. ஈரான் – இஸ்ரேல் மோதல் காரணமாக விமானச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் இடம்பெறுகின்றன. எவ்வாறாயினும், தற்போதைய நிலையில், மீண்டும் மோதல் அதிகரிக்குமாயின் விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

பேருந்தில் பயணிகளிடம் கட்டணம் அறவிட்ட பின்னர் அதற்கான பயணச்சீட்டையும் மிகுதிப் பணத்தையும் வழங்காத நடத்துனர்கள் தொடர்பில் முறைப்பாடளிக்க முடியும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு, குறித்த முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.