ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியர் தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் உறவினர்கள் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் 1500 பேருக்கு 1690 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதிக்கு முன்னர் கடற்படையின் வெலிசறையிலுள்ள அரச வணிக வெடிபொருட்கள் களஞ்சியசாலையில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
கொழும்பு மற்றும் லண்டன் நகரங்களுக்கிடையிலான விமானச் சேவைகளில் பயண மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை அதிகரித்துச் செல்வதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை லண்டன் நோக்கிச்சென்ற விமானங்கள் ஈராக் வான்மார்க்கத்தினூடாகவே பயணித்தன.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய 38 வேட்பாளர்களில் 34 பேர் இதுவரை பிரசார செலவுகள் தொடர்பான அறிக்கையை வழங்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுவரையில் 04 வேட்பாளர்கள் மாத்திரமே பிரசார செலவு தொடர்பான அறிக்கையை சமர்பித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ச,
அரச புலனாய்வு சேவையின் பிரதானியாக பிரதி பொலிஸ் மாஅதிபர் தம்மிக்க பிரியந்த நியமிக்கப்பட்டுள்ளார். பிரதி பொலிஸ் மாஅதிபர் தம்மிக்க பிரியந்த இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக செயற்பட்டுள்ளார்.