இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்து மாவை சேனாதிராஜா அக்கட்சியின் உறுப்பினர் எஸ். சிறிதரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். “மாவை சோமசுந்தரம் சேனாதிராசா ஆகிய நான் இதுவரை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து செயற்பட்டு வந்திருக்கின்றேன். இலங்கை தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு 2024 ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்றபோது பொதுக்குழுவில் தாங்கள் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தீர்கள். Read more
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பாக வினாத்தாளின் சில வினாக்கள் கசிந்த விடயம் தொடர்பில் கைது செய்யப்பட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் அலவ்வ பிரதேச மேலதிக வகுப்பு ஆசிரியர் ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்று கடுவலை நீதவான் ச்சானிமா விஜய பண்டார முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தினால் மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக அதன் கொழும்பு கிளைத் தலைவர் கே.வி. தவராசா தெரிவித்துள்ளார். கட்சியில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாம் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். தனிநபர்களின் தன்னிச்சையான போக்குக்குள் சிக்குண்டுள்ள தமிழரசு கட்சியுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது.
பொதுத் தேர்தலில் எந்தவொரு வகிபாகத்தையும் கொண்டிராமல் இருப்பதற்குத் தமிழ் மக்கள் பொதுச்சபை தீர்மானித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கும் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் தமிழ் மக்கள் பொதுச்சபை ஒன்றிணைந்து செயற்பட்டிருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலை ஒரு தேர்தலாகவோ பதவிக்கான போட்டியாகவோ தமது அமைப்பு கருதவில்லை எனத் தமிழ் மக்கள் பொதுச்சபை அறிக்கையொன்றை விடுத்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹங்வெல்ல மற்றும் கம்பஹா பகுதியில் நிதி மோசடியில் ஈடுபட்ட 40 வெளிநாட்டவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த திணைக்களத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே ஹங்வெல்ல பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்கள் ஊடாக இவர்கள் நிதிமோசடியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.