தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பாக வினாத்தாளின் சில வினாக்கள் கசிந்த விடயம் தொடர்பில் கைது செய்யப்பட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் அலவ்வ பிரதேச மேலதிக வகுப்பு ஆசிரியர் ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்று கடுவலை நீதவான் ச்சானிமா விஜய பண்டார முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

இதன்படி அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட மேலதிக வகுப்பு ஆசிரியரின் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.