அம்பாறையில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி முடிவுக்கு வந்தது – ஐந்து கட்சிகள் மாத்திரம் ஒரணியில் – தமிழரசு இ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித் தனியாக போட்டி – அம்பாறையில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி முடிவுக்கு வந்தது – ஐந்து கட்சிகள் மாத்திரம் ஒரணியில் போட்டியிடும் சாத்தியம்
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் இ சிவில் அமைப்பினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி முடிவுக்கு வந்துள்ளது. Read more
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடலானது இன்று மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் போது, தற்போதைய வேட்புமனு கையேற்றல் தொடர்பாகவும், எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணியுடன் விண்ணப்பங்களைப் பொறுப்பேற்பது நிறைவடையவிருந்தது. எனினும் அஞ்சல் செயற்பாடுகளில் காணப்பட்ட தாமதம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய 2024 ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பங்களை ஏற்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் இராஜதந்திர உறவுகளைப் பேணுவதில் அனைத்து நாடுகளுடனும் சமமான முறையில் செயற்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் வெற்றிடமாக உள்ள ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஒருவரை நியமிப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரி எம். எஸ். பீ. சூரியப்பெருமவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து முத்திரைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வழங்கப்பட்டுள்ள அனைத்து முத்திரைகளையும் பாராளுமன்ற தபால் அலுவலகத்திடம் ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்காக வருடத்திற்கு 10,000 முத்திரைகள் வழங்கப்படுவதுடன் இவற்றிற்காக 500,000 ரூபா செலவிடப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.