தற்போதைய அரசாங்கம் இராஜதந்திர உறவுகளைப் பேணுவதில் அனைத்து நாடுகளுடனும் சமமான முறையில் செயற்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவைப் போன்று சீனாவுடனும் இராஜதந்திர உறவுகளை பேணுவதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.