Header image alt text

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கையளித்தனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களை முதன்மை வேட்பாளராக குறிப்பிட்டு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

Read more

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம் கையளித்தனர். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்களை முதன்மை வேட்பாளராக குறிப்பிட்டு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

Read more

09.10.2016இல் மரணித்த தோழர் ஜெயம் (வேலாயுதப்பிள்ளை ஜெயபாலன்- கொக்குவில், ஈஸ்த்ஹாம், லண்டன்) அவர்களின் 08ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
மலர்வு 1956.02.06
உதிர்வு 09.10.2016
திரு. வேலாயுதப்பிள்ளை ஜெயபாலன் (தோழர் ஜெயம்) அவர்கள்-

Read more

இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான A/HRC-57/L.1 வரைவு வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வில் இந்த வரைவு இன்று நிறைவேறியுள்ளது. குறித்த வரைபை சம்பந்தப்பட்ட நாடு என்ற வகையில் இலங்கை எதிர்க்கும் என நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அறிவித்திருந்தார். Read more

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 8 நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அண்டைய நாடுகள் மற்றும் ரஷ்யாவிலிருந்து குறித்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் பொதுநலவாய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்களும் தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Read more

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்த தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் சுவிட்சர்லாந்து அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களின் வாழ்த்துக்களையும் ஜனாதிபதிக்குத் தெரிவித்தார். Read more

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு பெறுவதற்காக லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட சலுகை காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் நிலவும் அசாதாரண நிலைமையினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கீழ் மேற்கொண்டுள்ள பதிவுகள் காலாவதியான நிலையில் லெபனானில் பணியாற்றிவரும் இலங்கையர்களுக்கு குறித்த பதிவைப் புதுப்பிப்பதற்காக இந்த சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. Read more