எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 8 நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அண்டைய நாடுகள் மற்றும் ரஷ்யாவிலிருந்து குறித்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் பொதுநலவாய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்களும் தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பின் கண்காணிப்பாளர்களும் வருகைதரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.