ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் அம்பாறை தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுவை இன்றையதினம் கையளித்துள்ளனர். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சபாபதி நேசராசா அவர்களை முதன்மை வேட்பாளராக குறிப்பிட்டு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
டேவிட் ஐயா என கழகத் தோழர்களாலும் காந்தீய தொண்டர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட சொலமன் அருளானந்தம் டேவிட் (டேவிட் ஐயா) அவர்களின் ஒன்பதாமாண்டு நினைவு நாள் இன்று…. யாழ். கரம்பொன் கிழக்கு, ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், இலங்கையில் அதிகூடிய தகுதிவாய்ந்த கட்டிடக் கலைஞராக திகழ்ந்த இவர், இங்கிலாந்தின் லிவர்பூல் நகரின் சிரேஸ்ட கட்டிடக் கலைஞராகவும், பின்னர் கென்யாவின் மொம்பாசா நகரின் பிரதம கட்டிடக் கலைஞராகவும் பணியாற்றியவர்.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும் 17 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. அவற்றில் 3 அரசியல் கட்சிகளினதும் 3 சுயேட்சை குழுக்களினதும் வேட்பு மனுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த ஜனநாயக தேசிய கூட்டணியின் வேட்பு மனு இரத்தாகியுள்ளது.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. வன்னி மாவட்டத்தில் 24 கட்சிகள் மற்றும் 27 சுயேட்சை குழுக்கள் அடங்கலாக 51 தரப்பினர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யப்பட்டதுடன் அவற்றில் இரண்டு அரசியல் கட்சிகள் அடங்கலாக 4 தரப்புகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. இன்று மதியம் 12 மணியுடன் குறித்த பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன்படி 22 தேர்தல் மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடம் இருந்து 690 வேட்பு மனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சுன்னாகம் ஊரெழு கிழக்கு சர்வசக்தி முன்பள்ளியில் இடம்பெற்ற விஜயதசமி நிகழ்வில் கலந்து சிறப்பித்தபோது….
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பல சிரேஷ்டத் தலைவர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விலகியுள்ளனர். அவர்களில் மூன்று முன்னாள் ஜனாதிபதிகளும் அடங்குகின்றனர். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மைத்ரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை. அதேநேரம் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட பாக்கிய செல்வம் அரியநேத்ரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபராக பீ.அம்பாவிலவை நியமிப்பதற்கு தேசிய காவல்துறை ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. குறித்த பதவியில் இதுவரை காலமும் கடமையாற்றிய பிரதி காவல்துறைமா அதிபர் எம்.ஏ.ஆர்.பிரமேரத்ன, மேல் மாகாண வடக்கு பிரிவு பிரதி காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய காவல்துறை ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.