எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. இன்று மதியம் 12 மணியுடன் குறித்த பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன்படி 22 தேர்தல் மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடம் இருந்து 690 வேட்பு மனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 46 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றுக்கு ஆட்சேபணைகளை வெளியிடுவதற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அவற்றில் 2 சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு 44 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.