வன்னி தேர்தல் மாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. வன்னி மாவட்டத்தில் 24 கட்சிகள் மற்றும் 27 சுயேட்சை குழுக்கள் அடங்கலாக 51 தரப்பினர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யப்பட்டதுடன் அவற்றில் இரண்டு அரசியல் கட்சிகள் அடங்கலாக 4 தரப்புகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கமைய, வன்னி மாவட்டத்தில் மொத்தமாக 423 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.