Header image alt text

12.10.1998இல் வவுனியாவில் மரணித்த தோழர் மாறன் (மார்க்கண்டு தேவதாசன்) அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுகள்….
மலர்வு – 24.12.1959
உதிர்வு – 12.10.1998

பலத்த மழையுடனான வானிலையினால் நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தனகலு ஓயா தூனமலே பகுதியில் வௌ்ள மட்டத்தை அண்மித்துள்ளது. களனி கங்கை கொழும்பு நாகலகம்வீதி, ஹங்வெல்ல மற்றும் க்ளன்கோஸ் பகுதிகளில் சிறிய அளவிலான வௌ்ள மட்டத்தை அண்மித்துள்ளதுடன் கிங் கங்கை பத்தேகம பகுதியில் சிறிய அளவிலான வௌ்ள மட்டத்தை அண்மித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more

அரச நிறுவனங்களின் ஊடாக நடத்தப்படும் வெவ்வேறு நிகழ்வுகள் மற்றும் வேலைத்திட்டங்களின் போது பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் படத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி பெறப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல் பிரதமரின் செயலாளர் பிரதீப் யசரத்வின் கையெழுத்துடன் சகல அரச நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

வவுனியா – ஓமந்தை கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொருவரும் உயிரிழந்தார். காணி பிணக்கு காரணமாக நேற்று முன்தினம் இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது 38 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன் 48 வயதான ஒருவர் காயமடைந்தார். Read more

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், யு.எஸ்.எய்ட் என்ற சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தின் பிரதானி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தொலைகாணொளி ஊடாக நேற்று இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. Read more