இணையத்தினூடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 129 சீன பிரஜைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கமைய குறித்த விசாரணைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார். Read more
பத்தரமுல்லை – தலங்கம பகுதியில் போலி கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வந்த 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடும் நபர்களுக்கு விரைவில் கடவுச்சீட்டுக்களைத் தயாரித்துத் தருவதாகக் கூறி இந்த மோசடி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காகப் பிரதி காவல்துறை அதிபர் ஒருவரின் பெயரில் தயாரிக்கப்பட்ட முத்திரையையும் பயன்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஏப்ரல் 21 தாக்குதல்கள் மற்றும் சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி ஏலம் உட்பட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான காவல்துறை விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பதில் காவல்துறைமா அதிபருக்குப் பணிப்புரை விடுத்துள்ளது. நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் ஏனைய தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல விசேட விசாரணைகள் போதுமானதல்ல என அவதானிக்கப்பட்டுள்ளன.