Posted by plotenewseditor on 14 October 2024
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 14 October 2024
Posted in செய்திகள்
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேலும் 50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி.தர்மதிலக்க இந்த விடயத்தை அறிவித்தார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவுக்கமைய இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Posted by plotenewseditor on 14 October 2024
Posted in செய்திகள்
W.M.மென்டிஸ் மற்றும் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க 6 மாத சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார். அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 355 கோடி ரூபா பெறுமதிசேர் வரியை(VAT) செலுத்தத் தவறியதால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2016 மற்றும் 2019ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 3.5 பில்லியன் ரூபா பெறுமதிசேர் வரியை செலுத்த உத்தரவிடுமாறு கோரி உள்நாட்டு இறைவரி ஆணையாளர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். Read more
Posted by plotenewseditor on 14 October 2024
Posted in செய்திகள்
மன்னார் – விடத்தல்தீவு பகுதியில் காற்றாலை மின் நிலையத்தை அமைப்பது தொடர்பான இந்திய அதானி நிறுவனத்தின் திட்டத்தை தற்போதைய அமைச்சரவை மீள்பரிசீலனை செய்யத் தீர்மானித்துள்ளதாக சட்ட மா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். பிரதி மன்றாடியார் நாயகம் அவந்தி பெரேரா இதனை நீதிமன்றுக்கு அறியப்படுத்தினார். Read more
Posted by plotenewseditor on 14 October 2024
Posted in செய்திகள்
2024 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் வாக்காளர் பட்டியலை இறுவட்டாக(CD) வெளியிட தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 2024 பொதுத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினாலும் இந்த இறுவட்டினை(CD) பெற்றுக் கொள்ள முடியுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத்தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் செயலாளரினால், அதிகாரமிக்க பிரதிநிதியினால், சுயேட்சை குழுவின் தலைவரினால் அல்லது வேட்பாளரின் எழுத்துமுல கோரிக்கையின் அடிப்படையில் இறுவட்டை(CD) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 14 October 2024
Posted in செய்திகள்
2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். அத்துடன் கசிந்ததாக உறுதிசெய்யப்பட்ட 3 வினாக்களுக்கான முழுமையான புள்ளிகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பரீட்சையினை மீண்டும் நடத்துவதற்கான தேவைப்பாடு இல்லை. Read more
Posted by plotenewseditor on 14 October 2024
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வலி வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னரிடம் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது.