தேர்தல் பிரசார செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்காத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில், மூன்று பேர் மட்டுமே தங்கள் செலவு அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more
ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியிடப்படாத ஐ.எம். இமாம் மற்றும் ஏ.என்.ஜே டி அல்விஸ் அறிக்கைகளை வெளியிடுமாறு கோரியிருந்தார். குறித்த அறிக்கைகளை வெளியிடுவதற்கு அரசாங்கத்துக்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ள உதய கம்மன்பில, அரசாங்கம் அவற்றை வெளியிடத் தவறினால், தாம் அவற்றைப் பகிரங்கப்படுத்துவதாக அறிவித்திருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திட்டுள்ள உடன்படிக்கையில் அரசாங்கம் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமாயின் சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளில் சர்வதேச இறையாண்மை பத்திர உரிமையாளர்கள் தொடர்பான சில உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களில் நாட்டில் தங்கியிருந்த 460 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபர்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் இந்நாட்டில் தங்கியிருந்து வேலை செய்தமை தொடர்பில் குடிவரவு குடியகழ்வு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய புதிய வழக்கொன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா இந்த வழக்கை நேற்றைய தினம் சமர்ப்பித்ததாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
முன்பதிவு செய்யப்பட்டுள்ள புதிய கடவுச்சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை கூறினார். அதற்கமைய, புதிய கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை(21) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.