சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திட்டுள்ள உடன்படிக்கையில் அரசாங்கம் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமாயின் சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளில் சர்வதேச இறையாண்மை பத்திர உரிமையாளர்கள் தொடர்பான சில உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில், மக்களுக்கு அதிக வரி சுமையை ஏற்படுத்தியுள்ள சில பரிந்துரைகளில் திருத்தம் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.