
Posted by plotenewseditor on 18 October 2024
Posted in செய்திகள்

Posted by plotenewseditor on 18 October 2024
Posted in செய்திகள்
18.10.2005இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் சேகர் (இராஜசிங்கம் இராஜசேகர் – சேற்றுக்குடா) அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
Posted by plotenewseditor on 18 October 2024
Posted in செய்திகள்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இரசாயன விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியரான அவர், களனி பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராவார். 1997ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வெய்ன் அரச பல்கலைக்கழகத்தில் (Wayne State University) கலாநிதி பட்டம் பெற்ற அவர், உணவுக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் வகைகள், இரசாயனம் மற்றும் போசாக்கு தொடர்பான பல்வேறு ஆய்வுகளை வழிநடத்தியுள்ள பிரதான விரிவுரையாளராக காணப்படுகின்றார்.
Posted by plotenewseditor on 18 October 2024
Posted in செய்திகள்
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 28 அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இதுவரை 14 உத்தியோகபூர்வ இல்லங்கள் மாத்திரமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். Read more