இன்று காலை 10.00 மணிக்கு வவுனியா கோயில்குளம் ஆதி திருமண மண்டபத்தில், கட்சியின் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு. க. சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் வவுனியா மாவட்ட தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையேயான சந்திப்பு கட்சியின் ஸ்தாபகர் உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு விளக்கேற்றல், மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாகியது.

பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தின் பிரதமர் பதவி கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கே வழங்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையானது 25 பேரை கொண்டதாக வரையறுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தேர்தல் ஆணைக்குழுவின் விதிமுறைகளை பின்பற்றாமல் செயற்பட்டதால் தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவிற்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தக்கூடிய இலஞ்ச, ஊழலற்ற செயற்றிறன் வாய்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவல் பெர்னாண்டோ ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுவரை காலமும் போராடி வந்த அரசியல் உரிமைகளை பாராளுமன்றத்தின் ஊடாக வென்றெடுக்கக் கூடியவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என ஆயர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். கட்டுகஸ்தோட்டை – மஹய்யாவ பகுதியிலுள்ள லொஹான் ரத்வத்தவின் அலுவலகத்தை அண்மித்த வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டிலேயே 60 வயதான அவரது பிரத்தியேக செயலாளர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.