முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். கட்டுகஸ்தோட்டை – மஹய்யாவ பகுதியிலுள்ள லொஹான் ரத்வத்தவின் அலுவலகத்தை அண்மித்த வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டிலேயே 60 வயதான அவரது பிரத்தியேக செயலாளர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் உரிமையாளர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.