Header image alt text

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு அவதூறு ஏற்படும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு பிரதம நீதவான் திலின கமகேவிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று அறிவித்தனர். Read more

Read more

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட வைத்தியசாலை சமூகத்தினர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். Read more

பொதுத் தேர்தலை நவம்பர் 14ஆம் திகதி நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் சட்டங்களின் விதிமுறைகளுக்கு முரணாகவே, பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் வாக்கெடுப்பை நடத்துவதற்கான தினம் ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more

வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சியேரா லியோன் நாட்டின் ஜனாதிபதி Julius Maada Bio-ஐ சந்தித்துள்ளார். Julius Maada Bio தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு நேற்று(20) நாட்டிற்கு வருகை தந்திருந்தார். Samoa நாட்டில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக செல்லும் வழியிலேயே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அதற்கமைய, வௌிவிவகார அமைச்சர் அவர் தங்கியுள்ள ஹோட்டலுக்கு சென்று சந்தித்துள்ளார்.