Header image alt text

மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுப்பிரமணியம் சதானந்தம்
(தோழர் ஆனந்தியண்ணர்)
மலர்வு : 16.05.1945
உதிர்வு : 22.10.2021
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), அதன் வெகுஜன முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் மறைந்த பொதுச்செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணர் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில்,
அவருடன் இணைந்து கடந்து வந்த பாதையின் அனுபவங்களை மீண்டும் நினைவிற் கொள்வதன் மூலம் எமது அஞ்சலிகளை கணிக்கையாக்குவோம்.

Read more

சர்வதேச பொருளாதாரத்தில் மாற்று அணியாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரிக்ஸ்(BRICS) அமைப்பின் வருடாந்த மாநாடு ரஷ்யாவின் தலைமையில் இன்று ஆரம்பமாகின்றது. ரஷ்யாவின் Kazan நகரில் இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாடு இடம்பெறுகின்றது. பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவின் தலைமையிலான குழு நேற்று ரஷ்யாவிற்கு பயணித்துள்ளது. Read more

சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். சீனா – இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர மரியாதை என்பன குறித்து இதன் போது நினைவுகூரப்பட்டது. Read more

22.10.2020 இல் மரணித்த, காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னாள் உபதலைவர்களுள் ஒருவருமான அமரர் வைத்திலிங்கம் பாலச்சந்திரன் (பாலா அண்ணர்) அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று..
மலர்வு – 1951.12.18 உதிர்வு – 2020.10.22

Read more

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்க ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். Read more