Header image alt text

பாதுகாப்புக் குழுக்களின் பிரதானி, இராணுவ தளபதி, கடற்படை தளபதி மற்றும் பிரதமருக்கிடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்படி, பாதுகாப்புக் குழுக்களின் பிரதானி ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே, கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் பிரதமரை சந்தித்தனர். புதிய பிரதமர் பதவியேற்ற பின்னர் பாதுகாப்பு பிரதானிகளைச் சந்தித்த முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே ஸ்ரீ ரங்காவை கைது செய்வதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரையில் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. தாம் கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவிடக் கோரி ஜே. ஸ்ரீ ரங்கா அண்மையில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (24) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

இந்தியாவின் மும்பையிலிருந்து இன்று (24) பிற்பகல் புறப்பட்ட விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவலையடுத்து, குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மும்பையிலிருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸின் UK-131 விமானம் இன்று பிற்பகல் 02.56 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. Read more

இலங்கையில் உள்ள இஸ்ரேலியப் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் இருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் மற்றுமொருவர் கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பைச் சேர்ந்தவரின் தந்தை மாலைத்தீவு பிரஜை எனவும் தாய் இலங்கை பிரஜை எனவும் காவல்துறையினர் குறிப்பிடுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. Read more

இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியாகும் போலி தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என இராணுவ தலைமையகம் பொதுமக்களைக் கோரியுள்ளது. இராணுவ தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி, பொறுப்பற்ற வகையில் சமூக ஊடக செயற்பாட்டார்கள் சிலர் போலி தகவல்கள் அடங்கிய காணொளியைப் பதிவேற்றியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more