இந்தியாவின் மும்பையிலிருந்து இன்று (24) பிற்பகல் புறப்பட்ட விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவலையடுத்து, குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மும்பையிலிருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸின் UK-131 விமானம் இன்று பிற்பகல் 02.56 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

Air Bus A-320 ரக விமானமான இந்த விமானத்தில் 108 பயணிகளும் 8 ஊழியர்களும் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.