தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மன்னார் மாவட்ட தோழர்களின் ஒன்று கூடல் – 27.10.2024கழகத்தின் மன்னார் மாவட்ட தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையிலான சந்திப்பு இன்று காலை மன்னார் முருங்கனில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர் அவர்களின் ஒழுங்கமைப்பில், கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் தோழர் யோகானந்தராசா அவர்களின் தலைமையில், கட்சியின் தொழிற்சங்கப் பொறுப்பாளர் தோழர் காண்டீபன் அவர்களின் நெறியாள்கையின்கீழ் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக கட்சியின் ஸ்தாபகர் செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு விளக்கேற்றல், மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, கடந்தகால, சமகால அரசியல் நிலைமைகள், கடந்த கால தேர்தல் செயற்பாடுகள், வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் ஆகியன தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நா. இரட்ணலிங்கம், மன்னார் மாவட்ட செயலாளர் தோழர் ஜேம்ஸ் உள்ளிட்ட தோழர்கள், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், மத்தியகுழு உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியினுடைய வன்னி தேர்தல் தொகுதியின் எமது கட்சி வேட்பாளர்கள் கந்தையா சிவநேசன், வைரமுத்து திருவருட்செல்வன் மற்றும் ஆதரவாளர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
