Header image alt text

எமது கூட்டணிக்கென, வானலையில் ஒதுக்கப்பட்ட முதலாவது பகுதிக்கான (நாளை 29.10.2024 மாலை 03.15 – 03.30) எமது கூட்டணி சார்பான உரை, இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவை அலைவரிசைகளில் (102.1) (102.3) ஒலிபரப்பாக உள்ளது என்பதை அறியத் தருகிறோம்.

அனைத்து தொடருந்து மார்க்கங்களிலும் தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களுக்கு இடையே தொடருந்து ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கொம்பனிதெரு தொடருந்து நிலையத்தில் தொடருந்தொன்று தடம் புரண்டது. Read more

இலங்கைக்கு எவ்வித பயணத்தடையும் விதிக்கப்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரஜைகளுக்கு அறுகம்பை பகுதிக்கு செல்லும்போது அவதானமாக செயற்படுமாறு மாத்திரமே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் மீண்டும் நீண்ட வரிசையில் நின்று கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்கின்றனர். வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். Read more