அரச ஊழியர்களுக்கான வேதனம் அடுத்த வருடம் முதல் அதிகரிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நிலுவையிலுள்ள 5,000 ரூபாய் கொடுப்பனவு எதிர்வரும் ஜனவரி மாதம் வழங்கப்படும் எனவும் சுற்றறிக்கையின் பிரகாரம் உரிய வேதன உயர்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.