ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)
நாடாளுமன்றத் தேர்தல் – 2024
தேர்தல் விஞ்ஞாபனம்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பது தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (telo), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (dplf), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (eprlf), தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய போராட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து பயணிக்கும் ஓர் அரசியல் கூட்டமைப்பாகும். Read more

30.10.2007இல் முருகனூரில் மரணித்த தோழர்கள் செல்வராஜா (சிதம்பரப்பிள்ளை செல்வராஜா – சிதம்பரபுரம்), ரஞ்சன் (இருதயம் வேதராசா) ஆகியோரின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று
ரயில் நிலைய அதிபர்கள் திடீர் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சில சிக்கல்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு கோரி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அதிகாரிகளுடன் இன்று(30) நடைபெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான 5 சரீரப்பிணைகளில் முன்னாள் அமைச்சரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.