ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பயின்(David Pine) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து கூறிய நியூசிலாந்து உயர்ஸ்தானிகர், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக நாட்டிற்குள் வலுவான மற்றும் பலன் மிக்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார். Read more
யாழ் துன்னாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட தோழர் சுந்தர் (முருகேசு நவரத்தினராசா) அவர்கள் இன்று (25.10.2024) காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம்.
அம்பாறை மாவட்ட தமிழ் வாக்காளர்களுக்கான ஒரு ஆய்வுப் பதிவு…

பாதுகாப்புக் குழுக்களின் பிரதானி, இராணுவ தளபதி, கடற்படை தளபதி மற்றும் பிரதமருக்கிடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்படி, பாதுகாப்புக் குழுக்களின் பிரதானி ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே, கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் பிரதமரை சந்தித்தனர். புதிய பிரதமர் பதவியேற்ற பின்னர் பாதுகாப்பு பிரதானிகளைச் சந்தித்த முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே ஸ்ரீ ரங்காவை கைது செய்வதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரையில் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. தாம் கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவிடக் கோரி ஜே. ஸ்ரீ ரங்கா அண்மையில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (24) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மும்பையிலிருந்து இன்று (24) பிற்பகல் புறப்பட்ட விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவலையடுத்து, குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மும்பையிலிருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸின் UK-131 விமானம் இன்று பிற்பகல் 02.56 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கையில் உள்ள இஸ்ரேலியப் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் இருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் மற்றுமொருவர் கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பைச் சேர்ந்தவரின் தந்தை மாலைத்தீவு பிரஜை எனவும் தாய் இலங்கை பிரஜை எனவும் காவல்துறையினர் குறிப்பிடுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.