 இதுவரை 180 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்களில் 112 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 68 பேரும் விடுமுறைக்காக சென்று இருந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 44 கொரோனா வைரஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று பிற்பகல் 4.45 மணி வரையிலான காலப்பகுதியில் நாட்டில் 567 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று இனங்காணப்பட்ட 44 கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 126 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 434 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.