சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகப் பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான இணக்கப்பாட்டைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.