2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் வெற்றிடமாக உள்ள ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஒருவரை நியமிப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரி எம். எஸ். பீ. சூரியப்பெருமவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அவர் தற்போது பொது பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகக் கடமையாற்றி வருவதுடன் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.