இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான A/HRC-57/L.1 வரைவு வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வில் இந்த வரைவு இன்று நிறைவேறியுள்ளது. குறித்த வரைபை சம்பந்தப்பட்ட நாடு என்ற வகையில் இலங்கை எதிர்க்கும் என நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அறிவித்திருந்தார்.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான A/HRC/57/L.1 வரைவு வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வில் இந்த வரைவு இன்று நிறைவேறியுள்ளது. குறித்த வரைவை சம்பந்தப்பட்ட நாடு என்ற வகையில் இலங்கை எதிர்க்கும் என நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அறிவித்திருந்தார்.
இதனடிப்படையில் இன்று இடம்பெற்ற அமர்வின் போது, இலங்கை அதன் உத்தியோகப்பூர்வ நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையும் நிலையான அரசாங்கத்தின் ஊடாக மனித உரிமையை நிலைநாட்டும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
எந்தவொரு இறையாண்மை அரசும் அதன் அரசியலமைப்புக்கு முரணாக இயங்கும் மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை தீர்மானிக்கும் வெளிப்புறப் பொறிமுறையின் மேலெழுதலை ஏற்காது.
இந்தப் பொறிமுறையின் பாதீட்டுத் தாக்கங்கள் குறித்துப் பல நாடுகள் ஏற்கனவே அதிருப்தி வெளியிட்டுள்ளன.
எனவே 51/1 பரிந்துரையின் நிர்ப்பந்தத்தை நீடிக்கக் கோரி இன்று சபையில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவு பரிந்துரையை நிராகரிக்கத் தாம் கடமைப்பட்டுள்ளதாகவும் இலங்கை சார்பில் அமர்வில் பங்கேற்ற ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி அருணாதிலக்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.