கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும் 17 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. அவற்றில் 3 அரசியல் கட்சிகளினதும் 3 சுயேட்சை குழுக்களினதும் வேட்பு மனுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த ஜனநாயக தேசிய கூட்டணியின் வேட்பு மனு இரத்தாகியுள்ளது.
அத்துடன் 6 சுயேட்சை குழுக்களினதும் வேட்பு மனுக்கள் இரத்தாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் 49 தரப்பினரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.