இலங்கையில் மருந்து உற்பத்தித் துறையில் முதலீடு செய்வது தொடர்பில் கியூப அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான கியூப தூதுவர் அண்ட்ரெஸ் மார்செல்லோ தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், கியூப அரசாங்கத்தின் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நுளம்பு ஒழிப்புத் திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையிலுள்ள பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவ மற்றும் விளையாட்டுக் கல்விக்கான புலமைப்பரிசில்களை வழங்குவது உட்பட மேலும் பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.