மட்டக்களப்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள், பெண்களுக்கு சரியான முறையில் இட ஒதுக்கீட்டை வழங்கவில்லை என கபே எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. காத்தான்குடியில் உள்ள கபே அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையிலே நூற்றுக்கு 50 சதவீதம் பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
எனினும், வேட்பு மனு தாக்கல் செய்யும் சந்தர்ப்பத்தில் பெண்களுக்கு சரியான முறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் உள்ளது.
சில கட்சிகளில் சுயேச்சைக் குழுக்களில் பெயரளவில் மாத்திரமே ஒரு பெண் வேட்பாளரை உள்ளடக்கியுள்ளனர்.
இலங்கையிலே அனைத்து அரசியல்வாதிகளும் உயர் மட்டத்தில் இருக்கக்கூடிய தலைவர்களாக இருப்பினும் உள்ளக ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய அரசியல்வாதிகள் மிகவும் குறைவானதாகக் காணப்படுவதாக
கபே எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.